இன்று கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2019 09:46 am
karnataka-bjp-mlas-meeting-today

கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று எடியூரப்பா தலைமையில் நடைபெறுகிறது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாராசாமி  அரசு தோல்வியடைந்தது. 

இதனால், பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா பாஜக ஆட்சி அமைக்க சபாநாயகரிடம் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstmin

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close