பெண் புலியை அடித்தே கொன்ற கிராமத்தினர்...வைரலாகும் வீடியோ!

  கிரிதரன்   | Last Modified : 26 Jul, 2019 05:51 pm
enraged-villagers-beat-tigress-to-death-in-uttar-pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், ஃபிலிபித் மாவட்டத்துக்குட்பட்ட மட்டைனா கிராமத்துக்குள் நேற்று முன்தினம்,  பெண் புலி ஒன்று நுழைந்துள்ளது. கிராம மக்கள் ஒன்பது பேரை புலி கடித்த நிலையில் நேற்று, 19  வயது இளைஞன் மீது பாய்ந்தும் தாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி, புலியை ஓட ஒட விரட்டி, தடியால் அடித்தே கொன்றுள்ளனர்.

தகவலறிந்து வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைவதற்குள் புலி இறந்துள்ளது. உடல் முழுவதும் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே புலி இறந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. புலியை அடித்து கொன்றுள்ள கிராமத்தினரின் ஈவு இரக்கமற்ற செயல், சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

— Priyangi Agarwal (@priyangiaTOI) July 25, 2019

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close