மாயமான கபே காபி டே நிறுவனர் உடல் மீட்பு!

  அனிதா   | Last Modified : 31 Jul, 2019 09:33 am
cafe-coffee-day-founder-body-recovery

கபே காபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும் ஆவார். கடந்த சில நாட்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்திருந்த சித்தார்த்தா, நேற்று முன்தினம்  மாலை காரில் மங்களூருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது, நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு  ஓட்டுநரிடம் கூறியுள்ளார். 

பின்னர் காரில் இருந்து இறங்கி பாலத்தில் அங்கும், இங்குமாக நடந்து கொண்டே செல்போனில் பேசி கொண்டிருந்த அவர், வெகுநேரமாகியும் காருக்கு திரும்பவில்லை. இதனால் ஓட்டுநர் காரில் இருந்து வெளியே வந்து அவரை அக்கம்பக்கத்தில் தேடினார். ஆனால் சித்தார்த்தா கிடைக்காததால் பதற்றம் அடைந்த கார் ஓட்டுநர்  இது குறித்து அவரது வீட்டிற்கு தெரியப்படுத்தினார். 

இதையடுத்த குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து, தேடி வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து மனமுடைந்து எழுதிருந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகத்தில் போலீசார், ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படையினரின் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில், வெகு நேர தேடலுக்கு பிறகு இன்று காலை சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close