வங்கிக் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...ஒருவர் பலி...10 பேர் கவலைக்கிடம்! 

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2019 04:14 pm
maharashtra-roof-of-bank-collapses-in-solapur-1-dead-over-20-feared-trapped

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூருக்கு அருகே அமைந்துள்ளது கர்மலா கிராமம். இங்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின்  கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளை அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இன்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும், கட்டட இடிபாடுகளில் 20 பேருக்கு மேல் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வங்கி ஊழியர்களாக இருக்கக்கூடும் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close