புதுச்சேரி - பட்ஜெட் தாக்கல்

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 09:47 am
puducherry-budget-filing

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத் தொடரில் 2019- 20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ரூ.8,425 கோடிக்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே, வெற்று காகித மாதிரி பட்ஜெட்டுடன் அதிமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வந்ததால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

Newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close