புதுச்சேரி சட்டப்பேரவை: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 10:34 am
opposition-mlas-expelled

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் வெற்றுகாகிதம் எனக் கூறி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close