74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி!

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 10:24 pm
74-old-couple-who-gave-birth-to-twins

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 57 ஆண்டுகளை கடந்தும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் 55 வயதான பெண் ஒருவர் குழந்தை பெற்றதை கேள்வி பட்ட  ராஜா ராவ்-  மங்கம்மா தம்பதி கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனையில் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெற்றுள்ளனர்.  பல ஆண்டுகளுக்கு முன்னரே மங்கம்மாவிற்கு மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுவிட்டதால் செயற்கையான முறையில் ஒரே மாதத்தில் மாதவிலக்கை வரவைத்துள்ளனர் மருத்துவர்கள்.

அதோடு அதிர்ஷ்டவசமாக 74 வயதானாலும் அந்த தம்பதியருக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு போன்ற எந்த தொந்தரவுகளும் இல்லாததால் ஐ.வி.எப் முறையில் கருத்தரிக்க வைக்க செய்துள்ளனர் மருத்துவர்கள். தற்போது 74 வயதான மங்கம்மா இரண்டைக் குழந்தைகளை சிசேரியன் முறையில் பிரசவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close