1000 ரூபாய்க்காக ஆசிரியரை கொலை செய்த 4ம் வகுப்பு மாணவன்!

  கண்மணி   | Last Modified : 19 Sep, 2019 12:32 pm
a-teacher-murder-by-paying-1000-rupees-for-a-student

மும்பையில் நான்காம் வகுப்பு மாணவன் ஆசிரியரை குத்திக் கொலை செய்த வழக்கு விசாரணையில், திருப்புமுனையாக அந்த சிறுவனிடம்  மர்ம நபர்கள் 1000 ரூபாய் கொடுத்து ஆசிரியரை கொலை செய்ய தூண்டியது அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்னும் பாலி ஆசிரியை தன்னிடம் ட்யூசன் கற்று வந்த நான்காம் வகுப்பு மாணவனால் குத்தி கொலை செய்யப்ட்டுள்ளார்.  

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போது தன்னுடைய தாய் ஆசிரியையிடம் கடன் கேட்டதாகவும், அதனை கொடுக்க மறுத்த ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் தன்னுடைய தாயை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளான்.  

ஆனால் அந்த சிறுவன் முன்னுக்கு பின் முரணாக வாக்கு மூலம் அளித்ததால். சந்தேகம் அடைந்த காவல் துரையினர் சம்பவத்தன்று  சிறுவன் எங்கெல்லாம் சென்றான் என விசாரிக்கத் துவங்கினர். விசாரணையில் அந்த சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் மும்பையில் இருக்கும் ஒரு மாலுக்கு சென்று 1000 ரூபாயை செலவு செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிறுவனிடம் நடத்திய விசாரணையில் சில நபர்கள் ஆசிரியை கொள்வதற்காக ரூபாய் 1000த்தை முன் பணமாக கொடுத்தனர் என சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். ஆசிரியரை கொலை செய்ய  சிறுவனை தூண்டிய அந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close