மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

  அபிநயா   | Last Modified : 21 Sep, 2019 10:38 am
maharashtra-haryana-to-have-election-soon-ec

மஹாராஷ்டிரா, ஹரியானா, மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் தேதிகளை, சனிக்கிழமை (இன்று) மதியம் தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்கள் அக்டோபர் 27., தீபாவளிக்கு முன்னரே நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் மற்ற இரண்டு மாநிலங்களுடன் நடக்கப் போவதில்லை எனவும், அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியன.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், அம்மாநிலங்களில், தேர்தல் நடைமுறை விதிகளை பின்பற்ற தொடங்க வேண்டும்.

பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகளின் கூட்டணி உறவில், சமீபத்தில், சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அது சரியாகி, ஒன்றாக போட்டியிட தீர்மானித்து விட்டதாகவும், காங்கிரஸின் மூத்தத் தலைவர்கள், பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகளுக்கு தாவிக் கொண்டிருப்பதால், காங்கிரஸிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close