உத்தரப்பிரதேச விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி

  அபிநயா   | Last Modified : 21 Sep, 2019 03:26 pm
uttar-pradesh-farmers-march-towards-new-delhi-in-protest

கரும்புக்கான தொகையை வழங்கக்கோருவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேச பாரதிய கிஸான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பேரணி மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கரும்பு பயிர்களின் கடன் பாக்கிகள், முழுவதுமான கடன் தள்ளுபடி, விவசாயத்திற்காக இலவச மின்சாரம், வயதான விவசாயிகளுக்கான ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை அவர்கள் மத்திய அரசின் முன்பு வைத்துள்ளனர். மேலும்,  மாடுகளுக்கான பராமரிப்புத் தொகையாக தினம் தரும் ரூ.30 ஐ ரூ.300 ஆக மாற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, உ.பி. கரும்பு வளர்ச்சி மற்றும் கரும்பு ஆலைகள் துறை அமைச்சர் சுரேஷ் ராணா, அக்டோபர் 31., ஆம் தேதிக்குள் கரும்புக் கடன் பாக்கிகள் அனைத்தும் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close