மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்

  அபிநயா   | Last Modified : 27 Sep, 2019 03:35 pm
break-in-reported-in-sensitive-income-tax-unit-in-mumbai

மும்பையில், வருமான வரித்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகர் ஆயகர் பவன் 4வது மாடியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அதிகாரி ஆல்கா த்யாகியின், அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அலுவலகத்தின் பாதுகாவலர் கூறுகையில், காலை அலுவலகத்தை திறக்க முற்பட்டபோது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த ஆவணங்கள் சிதறி கிடந்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் விநாயகர் சதுர்த்தியான செப் 2 ஆம் தேதி நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

சிசி டிவி பதிவுகளை கண்ட போலீஸ் கமிஷனர் சதீஷ் குமார் குப்தா கூறுகையில், "செப் 2 அன்று நடைபெற்ற நிகழ்வுகளின் பதிவுகள் எங்களிடம் உள்ளன. எனினும், ஆவணங்கள் அனைத்தும் சிதறிய நிலையில் கிடந்ததால் ஏதேனும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதா என்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்" எனக் கூறினார்.

வருமான வரித்துறை அதிகாரி ஆல்கா த்யாகியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மும்பை பகுதிகள், ஃபோர்ட், பல்லார்ட் எஸ்டேட், கொலாபா மற்றும் நரிமன் பாய்ன்ட் ஆகியவையாகும்.

தீபக் கோச்சாரின் ஐசிஐசிஐ வழக்கு மற்றும் அம்பானி குடும்பத்தின் கருப்பு பண வழக்கு குறித்த ஆவணங்களை ஆல்காவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற வியூகத்திலும் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

மும்பை வருமான வரித்துறையின் தலைமையகமான, ஆயகர் பவன், 7 தளங்களும் 80 அறைகளும்  கொண்ட ஒரு கட்டிடமாகும். 7வது மாடி முக்கிய வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனி தளமாகும். இந்த கட்டிடத்தில் சிபிஐ அலுவலகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 2000 பேர் வேலை செய்யும் இதில் 100 சிசி டிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24*7 பாதுகாவலர்கள் இருந்தும், நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close