இந்திய பொருளாதாரத்தை சுரண்டிய ஆங்கிலேயர்களும், முகலாயர்களும்: யோகி ஆதித்யநாத்

  அபிநயா   | Last Modified : 28 Sep, 2019 04:08 pm
indian-economy-has-been-weakened-by-the-rule-of-mughals-and-britishers

"முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன், பொருளாதார வளர்ச்சியில் மிகச் சிறந்த நாடாக திகழ்ந்தது இந்தியா" என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த, உலக இந்து பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "200 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக திகழ்ந்தது இந்தியா. நம் பொருளாதார நிலை கண்டு உலகமே வியந்தது. முகலாயர்கள் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே, இந்தியா, உலக பொருளாதாரத்தில் 36 சதவீதம் வகித்திருந்தது. இவர்கள் ஆட்சியின் முடிவில் அது 20 சதவீதமாக குறைந்து, ஆங்கிலேயர் ஆட்சி முடிவில் முழுவதுமாக போய் விட்டது. இந்திய பொருளாதாரத்தை சுரண்டியதே ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் தான்" எனக் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், உத்திரபிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கைகள் மேற் கொள்ள போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close