கணவரை பழி வாங்க நாடகமாடிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கைது

  அபிநயா   | Last Modified : 29 Sep, 2019 01:02 pm
female-constable-gets-herself-shot-to-frame-in-laws

உத்திரபிரதேச மாநிலத்தில், தன் கணவரின் குடும்பத்தாரின் மீதிருந்த கோபத்தால், தன் நண்பர் மற்றும் காதலர் உதவியுடன் நாடகமாடிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள், போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் பாக்பாத் நகரை சேர்ந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ரேணு சிங், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் மீதிருந்த கோபத்தினால், அவர்களை குற்றவாளிகளாக்க, தன் காதலர் மணீஷ் மற்றும் நண்பர் விகாஸுடன் சேர்ந்து நாடகமாடி போலீஸில் மாட்டிக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னை 2 மர்பநபர்கள் சுட்டு விட்டு 2 லட்சம் ரூபாயை திருடி சென்றதாக கூறி பாக்பாத் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரேணு சிங் புகார் அளித்துள்ளார்.  இதை தொடர்ந்து விசாரணை மேற் கொண்ட போலீஸார், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் மீதிருந்த கோபத்தினால், மணீஷ் மற்றும் விகாஸின் உதவியுடன் தானே அனைத்தையும் செய்து விட்டு போலீஸில் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு, மூவரும் சிறை காவலில் வைக்கப்பட்டனர்.

ரேணு சிங்கின் கணவரும் போலீஸ் கான்ஸ்டபிள் என்பதும், திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில், சில மாதங்களாகவே இருவருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close