ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு!!

  அபிநயா   | Last Modified : 29 Sep, 2019 03:01 pm
haryana-election-parties-begin-to-declare-their-candidates-today

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை, தேர்தலில் பங்குபெறும் கட்சிகள் இன்று வெளியிட உள்ளன.

ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி அவர்கள் சார்பாக போட்டியிவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடவிருப்பதாகவும், காங்கிரஸ் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தங்களது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஜன்நாயக் ஜனதா கட்சி, அதன் இரண்டாவது பட்டியலையும், இந்திய தேசிய லோக் தால் கட்சி அதன் முதல் பட்டியலையும் வரும் 2 ஆம் தேதியன்று வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கும், திரும்ப பெறுவதற்கும் வரும் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தினங்கள் இறுதி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close