மற்றொரு லவ் ஜிகாத்தா!!! டெல்லி பெண் அபுதாபி சென்று மதம்மாறி திருமணம்!!

  கண்மணி   | Last Modified : 30 Sep, 2019 04:18 pm
kerala-woman-kidnapping-it-s-fake-report

டெல்லியில் படித்து வந்த இளம் பெண் அபிதாபிக்கு கடத்தப்பட்டு, பயங்கரவாத கும்பலில் சேர வற்புறுத்தப்படுவதாக கொடுக்கப்பட்ட புகார் போலியானது என அந்த பெண்ணே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஆயிஷா என்கிற இளம் பெண் டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் ஆயிஷா கடத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத கும்பலுடன் இணைய வற்புருத்தப்பட்டு வருவதாகவும் அந்த பெண்ணின் பெற்றோர்  புகார் அளித்திருந்தனர்.

இந்த விசாரணையின் போது செப்டம்பர் 18ம் தேதி வரை ஆயிஷா கல்லூரிக்கு வந்ததும் . அதே நாளில் அபிதாபிக்கு செல்வதற்காக விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதோடு கடந்த சில மாதங்களாக அபிதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருடன்  சமூக வலைதள வாயிலாக ஆயிஷாவிற்கு காதல்  ஏற்பட்டுள்ளதும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காகவே ஆயிஷா அபுதாபி சென்றிருந்தும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  இது குறித்து பதிலளித்துள்ள ஆயிஷா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தன்னுடைய காதலரை மணந்து கொள்ளவே தான் மதம் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close