தெலுங்கனாவில் தந்தையால் கொல்லப்பட்ட ஒரு மாத பெண் சிசு!

  கண்மணி   | Last Modified : 02 Oct, 2019 08:48 pm
infant-killed-by-a-father-in-telangana

இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத கொடூர குணம் படைத்த தந்தையால் ஒரு மாத பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர்கள்  சூர்ய தேஜா (30)  - அகிலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பம் தரித்த அகிலா கடந்த மாதம் இரண்டாவது பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். ஆனால் இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததை சூர்ய தேஜாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை  அகிலா குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அகிலாவிற்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவருடைய ஒரு மாத குழந்தை வீட்டிற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய இறந்து கிடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு குழந்தையின் தந்தை தான் காரணம் என அறிந்த அந்த ஊர் மக்கள் சூர்ய தேஜாவை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.  இந்த சம்பவம் தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close