பாட்னாவில் வடியத் தொடங்கியது வெள்ளம்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்!!

  அபிநயா   | Last Modified : 03 Oct, 2019 02:47 pm
rescue-and-relief-operations-intensified-in-state-capital-patna

கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக, பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கி இருந்த நிலையில், பாட்னாவில் மழையின் தீவிரம் சற்று குறைந்து, தேங்கியிருந்த வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்காக கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக, இரு மாநிலங்களின் முக்கிய நகரங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன. கடுமையாக இடைவிடாது பெய்து வந்த கன மழையினால் பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமணைகள் என அனைத்தும் நீரில் மூழ்கி மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. தண்டவாளங்கள் முழுவதும் நீரில் மூழ்கியதால், ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பீகாரின் தலைநகரமான பாட்னாவில், மழையின் தீவிரம் சற்று குறைந்து, தேங்கியிருந்த வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளதையடுத்து, மாநில அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை படையின் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close