இளம்பெண்ணுக்கு மாடலிங் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை: 30 பேர் மீது வழக்குப்பதிவு

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 05:23 pm
the-girl-was-lured-into-working-for-a-sex-racket-with-a-career-in-modelling

கேரளாவில் இளம் பெண்ணை மாடலிங் துறையில் சேர்த்து விடுவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கேரளா மாநிலம் திரிசூரில் 19 வயது இளம் பெண்ணை மாடலிங் துறையில் சேர்த்துவிடுவதாக கூறி, வடநபள்ளியை சேர்ந்த  சிராயத் சந்திர மோகன் என்பவர் அழைத்து சென்றுள்ளார். ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்ற அவர், அங்கு மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்பு அந்த புகைப்படங்களை பயன்படுத்தி அவரை மிரட்டி மற்ற ஆண்களுடன் உடலுறவுகொள்ளும் படி கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த 6 மாதங்களில் 30 பேர் தன்னை சித்தரவதைக்கு உட்படுத்தியதாக அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சாலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close