மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்தலைவர்களை கழட்டி விட்ட பாஜக!!

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 05:47 pm
maharashtra-elections-bjp-veterans-unhappy-about-selected-candidates

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முக்கியத்தலைவர்களை போட்டியிட அனுமதிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 148 இடங்களிலும், சிவ சேனா கட்சி 126 இடங்களிலும் போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக, அதன் முக்கியத்தலைவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் வினோத் தாவ்டே மற்றும் சந்திரசேகர் பவான்குல், முன்னாள் அமைச்சர்களான ஏக்நாத் காட்சே மற்றும் பிரகாஷ் மேஹ்தா மற்றும் ராஜ் புரோஹித் ஆகியோருக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close