தலையில் 1.13 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியவர் கைது !

  கண்மணி   | Last Modified : 06 Oct, 2019 01:58 pm
man-arrested-with-1-13-kg-gold-in-his-head

கொச்சி விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த நவ்சாத் எனபவர் தனது தலையில் மறைத்து எடுத்து வந்த 1.13 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஷார்ஜாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரக விமானத்தின் மூலம் கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்து  இறங்கிய விமானிகளிடம்  வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் செய்த சோதனையில் போது, பயணிகளில் ஒருவரின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் , அவரை பிடித்து சுங்க துறை அதிகரைகள் தீவிர சோதனை செய்தனர். பின்னர் நீண்ட சோதனைக்கு பிறகு அந்த நபர் தன்னுடைய தலையில் அணிந்திருந்த விக்கிற்குள் தங்கக்  கட்டிகளை சிறிய கருப்பு நிற மூட்டையில் கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத்  தொடர்ந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர்  கேரளாவில் உள்ள மலப்புரத்தை சேர்ந்த நவ்சாத்  என்பது தெரியவந்துள்ளது. நவ்சாத்திடமிருந்த 1.13கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள். இந்த கடத்தலில் உள்ள பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close