பாஜக கூட்டணியில் திடீர் விரிசல்? அரசியலில் பரபரப்பு!

  அபிநயா   | Last Modified : 09 Oct, 2019 03:48 pm
rift-between-the-alliance-parties-bharatiya-janata-party-and-janata-dal

பீகாரில் நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டங்களில், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளாதது, அந்த மாநில அரசியலில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும், தசரா பண்டிகள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட பண்டல்கள் அமைக்கப்பட்டு, துர்கா பூஜை சிறப்பாக நடைபெற்றது. 

பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பண்டல்கள் அமைக்கப்பட்டு, விழா எடுக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்ட நிலையில், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர்களோ, அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்களோ பங்கேற்கவில்லை. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரு கட்சியிடைலான உறவில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், கூட்டணி விரைவில் முறிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், "இது போன்ற செய்திகள் வெறும் வதந்திகள்; இவற்றை யாரும் நம்ப வேண்டாம்" என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, பிகர் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், "தசரா பண்டிகையில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தினால்,கூட்டணியில் பூசல் இருக்கிறது என்ற முடிவுக்கு வருவது அர்த்தமற்ற ஒன்று. பீகார் மாநிலத்தில், சமீபத்தில், வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவினாலும், மக்களின் தினசரி வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டிருப்பதாலும், இம்முறை, தசரா நிகழ்வில் கலந்து கொள்ள போவதில்லை என்று பல தலைவர்கள் குறிப்பிட்ட செய்திகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. 
அது போன்ற  உணர்வுகள் மற்ற தலைவர்களுக்கும் இருக்கலாம். எங்களிடையே எந்த விதமான சண்டையோ, கருத்து வேறுபாடுகளோ கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close