மொபைல் சேவை இனி தொடரலாம் - காஷ்மீர் மாநில அரசு

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 02:19 pm
postpaid-mobile-services-to-be-restored-in-valley-soon

கடந்த ஆகஸ்ட் முதல், இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் பகுதியில், மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவைகளின் சேவையை தொடர, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஊடுருவல்களும், தாக்குதல்களும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையல், தற்போது தாக்குதல்கள் குறைந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதால், அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்ட நிலையில், மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவையும், வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மதியம் 12 முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, அம்மாநிலத்தின் முக்கிய செயலாளர் ரஞ்சன் கன்சல் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் முதல், இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலமான ஜம்மு காஷ்மீர் பகுதியில், வெளிமாநில மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது, அப்பகுதியில், சுற்றுலா மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close