பேருந்து இயக்கத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை

  அபிநயா   | Last Modified : 13 Oct, 2019 08:31 pm
not-afraid-kcr-stands-firm-as-telangana-transport-staff-continue-strike

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை, பணியிலிருந்து நீக்கி, போக்குவரத்தை சீர் செய்ய முயற்சித்தை தொடர்ந்து, இன்று ஓர் ஊழியர் தீக்குளிப்பில் ஈடுபட்ட நிலையில், 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அரசு தரப்பில் எந்த மாற்று கருத்தும் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானா போக்குவரத்து கழகம், அம்மாநில அரசிடம் சில கோரிக்கைகள் முன்வைத்திருந்ததை தொடர்ந்து, மாநில அரசு அக்கோரிக்கைகளை நிராகரித்ததால்,  போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 52,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, தற்காலிக பணியாளர்களை வேலைக்கு எடுத்து  போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் ஈடுபட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று, அம்மாநில போக்குவரத்து ஊழியர் ஒருவர் தீக்குளிப்பில் ஈடுபட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, எதிர்கட்சிகள் அனைத்தும், அவ்வூழியரின் மரணத்திற்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தான் காரணம் என்று குற்றம் சுமத்தி வந்தனர்.

இவர்களின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், அரசின் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும், 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், பேருந்து நிலையங்களில், சிசிடிவி கேமிரா வசதியும் பொருத்தப்படவுள்ளதாக அவர் கூறினார். பேருந்து இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது யாராக இருந்தாலும் அரசு தயங்காமல் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close