ஹரியானா தேர்தல் கருத்து கணிப்புகள் - ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது பாஜக!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 05:40 pm
bjp-likely-to-return-to-power-with-bigger-mandate-congress-faces-rout

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று (அக்டோபர் 21) முடிவடைந்ததை தொடர்ந்து, ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில், மொத்தமாக போட்டியிட்ட 90 இடங்களில் 47 இடங்களில் வெற்றிப்பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, இவ்வாண்டிற்கான தேர்தலில் 69-73 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த தேர்தலில், 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, சமீபத்திய தேர்தலில், 4 இடங்கள் பின்தள்ளி 11 இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இவ்விரு பெரும் கட்சிகளை தொடர்ந்து, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட, துஷ்யந்த் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி, 4-6 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பிற கட்சிகள் அனைத்தும், இந்த ஆண்டு 3 இடங்களில் தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

தேர்தலின் முடிவுகள் வரும் வியாழன் அன்று (அக்டோபர் 24) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கருத்து கணிப்புகளின் படி முன்னிலை வகுக்கும் பாஜக, முடிவுகளிலும் முன்னிலை வகுக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close