கமலேஷ் திவாரியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 04:42 pm
kamlesh-tiwari-killing-trail-littered-with-clues-prime-suspects-held

கடந்த சில நாட்கள் முன்பு, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் இருவரையும் தற்போது குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கடந்த சில நாட்கள் முன்பு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்திருந்த போலீசார் தற்போது இந்த கொலையின் முக்கிய குற்றவாளிகளான ஜாகிர் உசேன் ஷேக்(34) மற்றும் மொய்னுதீன் குர்ஷித் பதான்(27) ஆகிய இருவரையும் குஜராத்தின் ஷாம்லாஜி நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

கமலேஷ் திவாரியை கொல்வதற்கு பல நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்ததாக போலீசாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ள இருவரையும், லக்னோ போலீசாரிடம் ஒப்படைக்கவிருப்பதாக குஜராத் மாநில போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், நபிகள் நாயகம் ஓரினச்சேர்க்கையாளர் என்ற அவரது கருத்துக்காக தான் அவரை கொலை செய்தோம் என்ற அவர்களின் வாக்குமூலம், கடந்த நான்கு நாட்களாக அவரின் கொலைக்கான பின்னனி என்னவாக இருக்கும் என்ற குழம்பத்தில் இருந்த அனைவரையும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close