கேரளாவில் வெடித்த அரசியல் வன்முறை: ஒருவர் பலி !

  கண்மணி   | Last Modified : 25 Oct, 2019 04:50 pm
political-violence-erupts-in-kerala-one-killed

கேரளமாநிலம்  திருவனந்தபுரம்: மலப்புரத்தில் உள்ள  தனூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்   வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்  கேரளாவில் அரசியல் வன்முறையாக வெடித்துள்ளது. 

திருவனந்தபுரம் அஞ்சூடியில் வசிப்பவர்  இஷாக்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த இவர் தொழுகை செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு 7:30 மணியளவில்  அங்குள்ள  மசூதிக்கு சென்றுள்ளார்.  அப்போது  நான்கு பேர் கொண்ட கும்பல் இஷாக்கை  வாள்களையும், கத்திகளையும் கொண்டு தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த இஷாக் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைக்கும்  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தொண்டர்களுக்கும்  தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close