கமலேஷ் திவாரி கொலை வழக்கு - அவ்வழக்கின் ஒரே சாட்சிக்கு மறுக்கப்பட்ட பாதுகாப்பு!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 05:43 pm
kamlesh-tiwari-murder-case-security-denied-for-the-only-witness

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அந்த வழக்கின் ஒரே சாட்சியான கமலேஷ் திவாரியின் பாதுகாவலருக்கு போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கூறிய பாதுகாவலர் சௌராஷ்டிரஜீத் சிங், கமலேஷ் திவாரியை சந்திக்க வந்த இருவரில் ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலிப்பதாக கூறி அதற்கு திவாரியின் உதவி வேண்டும் என்னும் உரையாடலை மட்டும் தான் கேட்டதாகவும், இந்த கொலைக்கு ஒரே சாட்சியான தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்திரப்பிரதேச மாநில போலீசாரிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் அலட்சியமாக நடந்துகொள்வது வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close