பட்டாசு   வெடிக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

  கண்மணி   | Last Modified : 28 Oct, 2019 08:40 pm
one-killed-at-diwali-celebration

ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரின் சுந்தர்பாடா பகுதியைச் சேர்ந்த பி.டி.ஏ காலனியில் வசிப்பவர்  அமரேஷ் நாயக். இவர் கடந்த  ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அந்த பகுதிக்கு 20 பேர் கொண்ட கும்பலுடன் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த  கும்பல் மறைத்து வைத்திருந்த வாளை கொண்டு அமரேஷ் நாயக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.  

இதனால் படுகாயமடைந்த அமரேஷ் நாயக்கை அவரது  நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  கொலை  தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை  தேடிவருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close