தீவிரவாதிகளின் தாக்குதலில்   பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர்!

  கண்மணி   | Last Modified : 28 Oct, 2019 08:46 pm
fifteen-wounded-in-terrorist-attack

வடக்கு காஷ்மீரின் சோபூரில் உள்ள பஸ் ஸ்டாண்டில்  பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உட்பட பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர்.  பலத்த காயமடைந்து ஒருவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

 

— Kashmir Zone Police (@KashmirPolice) October 28, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close