இறப்புகளை நிறுத்துவதற்காக 30 வருடங்களாக மணமகள் வேடமணிந்த நபர் !

  கண்மணி   | Last Modified : 03 Nov, 2019 03:14 pm
a-man-who-has-been-a-bridal-for-30-years

உத்தரப்பிரதேசம்  ஜான்பூரைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியான சிந்தாஹரன் சவுகான்  என்பவர் தனது குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களை தடுப்பதற்காக கிட்ட தட்ட 30 ஆண்டுகளாக மணப்பெண் உடை அணிந்து உலா வருக்கிறார்.
சிந்தாஹரன் சவுகான் என்பவர்  தனது மூத்த மனைவி மற்றும் இரண்டாவது மனைவி இருவரின் இறப்பிற்கு  பிறகு  தன்னுடைய குடும்பத்தில் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்ததோடு அவருக்கும் உடல் நிலை மோசமாகியுள்ளது. 

இந்நிலையில் சவுகானின் இரண்டாவது மனைவி அவரது கனவில் தோன்றி தன்னுடைய திருமண உடையை அணிந்து கொண்டால் வீட்டில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிவித்தால் , 1989 ம் ஆண்டிலிருந்து  மணப்பெண் உடையையும், பெரிய மூக்கு வளையம் மற்றும் வளையல்களை சவுகான் அணிந்து வருகிறார். அன்றிலிருந்து தன்னுடைய வாழ்க்கை சுமுகமாக செல்வதாக சவுகான் தெரிவிக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close