அயோத்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் !!

  அபிநயா   | Last Modified : 05 Nov, 2019 09:03 pm
uttar-pradesh-on-high-alert-after-intel-input-on-terrorist-presence-in-ayodhya

உத்திரப்பிரதேசம் : அயோத்தியா வழக்கில், வரும் நவம்பர் 17 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக எச்சரித்துள்ளது இந்திய உளவுத்துறை.  

உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று காலை தொடங்கியுள்ள 14வது கோஸி பரிக்ரமா நாளை காலை முடிவடையவிருப்பதை தொடர்ந்து, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பாகிஸ்தானை  பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 7 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய உளவுத்துறை. 

உளவுத்துறையின் எச்சரிக்கை படி, குறிப்பிடப்பட்டுள்ள 7 பயங்கரவாதிகளில், முஹமது யாகுப், அபு ஹம்சா, முஹமது ஷாபாஸ், நிஸார் அஹமது மற்றும் முஹமது கௌமி ஆகிய 5 பயங்கரவாதிகளின் பெயர்களை உளவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close