அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு!!!

  அபிநயா   | Last Modified : 16 Nov, 2019 09:03 pm
west-bengal-to-set-up-detention-centres-for-arrested-foreigners-tmc-says-no-connection-with-nrc

பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக 2 தடுப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, அயல்நாட்டு குற்றாவாளிகள் தங்களது தண்டனை காலம் முடியும்வரை தங்குவதற்காக, எல்லா மாநிலங்களிலும் ஒரு தடுப்பு மையமாவது அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் அம்மாநில அமைச்சர் உஜ்வால் பிஸ்வாஸ்.

இதற்காக, மம்தா பேனர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஏற்கனவே நியூ டவுன் பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், மற்றொரு இடம் குறித்த ஆலோசனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார் பிஸ்வாஸ்.

மேற்கு வங்காளத்தில் இருக்கும் அயல்நாட்டு கைதிகளில் பலரும் ஆப்ரிக்கா நாட்டை சேர்தவர்களாக இருப்பதாகவும், அவர்களை இந்திய கைதிகளுடன் வைக்கப்படுவதை தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாட்டின் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடும் உஜ்வாலா பிஸ்வாஸ், அம்மாநில அரசின் இந்த முடிவிற்கும், அசாம் மாநில தேசிய குடியுரிமை பட்டியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் முன்வைத்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close