தாய், தங்கை, சகோதரரின் மனைவி ஆகியோரை வன்புணர்வு செய்துவந்த மகனை அடித்துக் கொன்ற தந்தை!!!

  அபிநயா   | Last Modified : 19 Nov, 2019 04:34 pm
man-repeatedly-raped-mother-sister-sister-in-law-murdered-by-family-members

மத்திய பிரதேசம் : குடிபோதையில் தனது தாய், தங்கை, தம்பியின் மனைவி என குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களையும் வன்புணர்வு செய்துவரும் மகனை, கொடுமைகள் தாங்காது அவனது தந்தையே அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம், ததியா நகரின் கோபால்தாஸ் மலை பகுதியில் கடந்த 12ஆம் தேதி ஓர் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவரது உறவினர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த விசாரணையின் போது போலீசாரையே திடுக்கிட வைக்கும் ஓர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார் இறந்தவரின் தந்தை. 

குடிபழக்கத்திற்கு அடிமையாகி, தாய், தங்கை, சகோதரனின் மனைவி என்றும் பாராமல், வீட்டில் உள்ள அனைத்து பெண்களையும் தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளார் இறந்து போயிருக்கும் இளைஞன். இவரது உடல் மீட்கப்படுவதற்கு முந்தைய தினம், கடந்த 11ஆம் தேதி இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், தனது சகோதரரின் மனைவியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பல மாதங்களாக இந்த கொடுமைகளை சகித்து வந்துள்ள இவரது தந்தை, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல், தனது மருமகளை காப்பாற்றும் நோக்கத்துடன், குடிகார மகனை, குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் போலீசாரிடம் கூறியுள்ளார் அந்த இளைஞனின் தந்தை. இவரின் வாக்கு மூலத்தை தொடர்ந்து, தற்போது அவரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் மேஜிஸ்டிரேட். 

தனது மகன் செய்த தவறுக்கு தண்டனை அளித்துள்ள போதும், இத்தகைய செயலில் தனது மகன் ஈடுபடுவது தெரிந்ததுமே மௌனம் காக்காமல் புகார் அளித்திருந்தால், அந்த குடும்பத்தின் பெண்களும் பாதுகாக்கப்பட்டதோடு, தற்போதைய சிறை தண்டனையும் அவர் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று கூறிய போலீசார், வழக்குபதிவாகியுள்ள நிலையில், விசாரணை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த வழக்கு குறித்த மேலும் விபரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close