மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்தவர் தான் 5 ஆண்டுகளும் முதலமைச்சர்: சஞ்சய் ராவத்

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 10:33 am
sanjay-raut-shiv-sena-chief-minister-will-be-there-for-full-5-years

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக இருப்பார் என அக்கட்சியை சேர்ந்த எம்.பி  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்று 3 கட்சிகளும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியை  உறுதி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் பதவியை சிவசேனாவிற்கு தர காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கோரி வருவதாகவும் தெரிகிறது. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கொண்ட குழு ஒன்று இன்று மும்பையில் சரத்பவாரை சந்திக்க உள்ளது. இதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலா என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இன்று உரிமை கோரினால் திங்கட் கிழமை புதிய அரசு பதவியேற்க வாய்ப்புள்ளது. 

Newstm.in 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close