மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 10:01 am
devendra-fadnavis-takes-oath-as-maharashtra-chief-minister

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். 

மகாராஷ்டிராவில் கூட்டணி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆட்சியமைக்க 145 எம்.எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக 105 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் 54 எம்.எல்ஏக்களும்  இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். இன்று மும்பை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close