சூட்கேசில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட சடலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 12:03 pm
male-body-taken-from-the-suitcase-to-pieces

கடலில் மிதந்த சூட்கேசில் இருந்து துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருந்த ஆண் உடல் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மும்பை மாகிம், மாக்தூம் ஷா பாபா மசூதி அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் மலை பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் சூட்கேசை எடுக்க சென்ற போது, அதில் மனித கால் வெளியே நீண்டு கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சூட்கேசை கைப்பற்றி வெளியே எடுத்து வந்து திறந்து பார்த்தனர். அதன் உள்ளே துண்டு துண்டாக வெட்டிய ஆண் சடலத்தை பார்த்து போலீசார் அதிர்ந்து போயினர். 

இதையடுத்து சூட்கேசில் இருந்த கால் மற்றும் தோள்பட்டை பகுதிகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைப்பகுதி இல்லாததால் கொலை செய்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி யார்? கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close