குடிபோதையில் அண்ணியின் மூக்கை அறுத்த வாலிபர்!

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 06:02 pm
drunk-man-chops-off-sister-in-law-s-nose-with-knife

உத்திரபிரதேசத்தில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது சகோதரரின் மனைவி மூக்கை கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மொரடாபாத் என்ற இடத்தில் பெற்றோர், இரண்டு மகன்கள் மற்றும் மருகளுடன் வசித்து வருகின்றனர். அவர்களின் கடைசி மகன் வீட்டிற்கு மதுப்போதையில் வந்துள்ளார்.

அப்போது வீட்டில் ஏற்பட்ட தகராறில் சகோதரரின் மனைவி அதாவது அண்ணியின் மூக்கை அந்த இளைஞர் கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் வடிந்த நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close