பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்கு?-வருகிறது அதிரடி சட்டம்

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 10:31 am
andhra-cm-jagan-promises-law-to-punish-sex-criminials

ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் தப்பியோடும் போது காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதற்கு ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஆந்திர சட்டசபையில் பேசும் போது, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

அதன்படி நேற்று நடந்த ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். இதில் முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் ஆந்திர சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close