திருந்திய பெண்ணை 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்..!

  முத்து   | Last Modified : 13 Dec, 2019 08:26 am
nri-s-wife-brutally-stabbed-to-death

கேரளாவில் மனம் திருந்தி கணவருடன் சேர்ந்து வாழ முடிவுசெய்த பெண்ணை கள்ளக்காதலன் 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சுமுக்கு பகுதியை சேர்ந்த ஷெரீப் என்பவரின் மனைவி ஷைலா. கணவர் ஷெரீப் வெளி நாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் 40 வயதான ஷைலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான லாரி ஓட்டுநர் அனீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. உறவினர்கள் எச்சரித்தும் ஷைலா கேட்காமல் அனீஷுடன் சுற்றியுள்ளார். இதனையறிந்த கணவர் ஷெரீப் ஷைலாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து திருந்திவாழ முடிவு செய்த ஷைலா, அனீஸ் உடனான தனது காதலை முறித்துக் கொண்டார். 


இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் அனீஷ், பள்ளியில் மகளை விட்டு வீடு திரும்பிய ஷைலாவை வழி மறித்து கழுத்து, மார்பு ,தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.

ஷைலாவின் அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு ஷைலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கத்தியுடன் சுற்றிய கொலையாளி அனீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close