மீண்டும் பாபர் மசூதி கட்டப்படுமா?!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 07:39 pm
babri-mosque-to-be-rebuilt

சென்ற மாதம் 9ம் தேதி  அயோத்தியில் உள்ள நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு?5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு,  சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளித்தது.அதே நேரம், முஸ்லீம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, 17 சீராய்வு மனுக்களும் ,ஜமியத் உலமா  அமைப்பும் சீராய்வுமனுவை தாக்கல் செய்தது. நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து சீராய்வு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் அனைத்து மனுக்களையும்  தள்ளுபடி செய்து  உத்தரவிட்டனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close