மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள்

  முத்து   | Last Modified : 14 Dec, 2019 09:58 am
fire-broke-out-in-a-plywood-factory-in-west-delhi

டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
முண்ட்கா பகுதியில் உள்ள பலகை தொழிற்சாலையில் லேசான தீபற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதோடு மட்டுமல்லாமல் எதிரே இருந்த கட்டிடத்திற்கும் தீ பரவியது.

தகவலறிந்து 21 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்த மீட்பு குழுவினர் தீயை கட்ப்படுத்த கடுமையாக போராடினர். இந்த தீவிபத்தில் 61 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் அண்மையில் பற்றிய 2ஆவது பயங்காரமான தீவிபத்து என குறிப்பிடப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டித்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close