பொதுப்பணித்துறை பொறியாளர் மீது கொலைவெறி தாக்குதல்

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 09:07 am
puducherry-government-engineering-attack-cctv

புதுச்சேரியில் பொறியாளரை தாக்கிய 5 பேர் கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பொதுப்பணித்துறை பொறியாளராக உள்ளார். இவர் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, சத்யா நகர் அருகே அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அருகிலிருந்தோர் வந்ததும் 5 பேரும் ஓடிவிட்டனர். புகாரின்பேரில் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர், அதன்படி செல்வராஜை தாக்கிய நிவாஸ், சந்துரு, அருண், கிஷோர், தமிழ் ஆகியோரை தேடி வருகின்றனர். 5 பேரை கைது செய்தால்தான், தாக்குதலுக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close