பணத்திற்காக கடத்தப்பட்ட முதலமைச்சரின் சகோதரர்.. அதிரடியாக மீட்ட காவல்துறை

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 11:07 am
manipur-cm-s-brother-rescued-police

மணிப்பூர் முதலமைச்சரின் சகோதரரை கடத்திவைத்துக்கொண்டு, 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

மணிப்பூர் முதலமைச்சர் பிரென்சிங்கின் சகோதரர் டோங்பிராம் லுகோய் சிங், கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் என கூறிக்கொண்டு அவரது வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, டோங்பிராமையும் அவரது உதவியாளரையும் கடத்திச்சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை மீட்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பிரென்சிங்கின் மனைவியை செல்போனில் தொடர்புகொண்ட அக்கும்பல், 15 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என கூறி மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் துரித விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்கள் இருப்பிடத்தை அறிந்து சுற்றி வளைத்தனர். பின்னர் கடத்தல் கும்பல் 5 பேரையும் கைது செய்து பிரென்சிங்கையும் மீட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close