வெங்காயம் வாங்க போன தாய்... மகளை சீரழித்த சிறுவன்..!

  முத்து   | Last Modified : 16 Dec, 2019 10:51 am
body-sexually-harrassed-child

ஆந்திர மாநிலம் குண்டூரில், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெங்காயத் தட்டுப்பாட்டை போக்க ஆந்திர மாநிலம் குண்டூரில் அரசு சார்பில் மலிவு விலையில், வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது மகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு, வெங்காயம் வாங்கி வர சென்றுள்ளார். தாய் வெளியில் சென்றதும், அருகில் இருந்த வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார் அந்த சிறுமி. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயது மாணவன், சிறுமியின் வாயில் துணியை பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close