பாம்புகள் மீது அமர்ந்த இளம்பெண்! செல்போனால் நேர்ந்த விபரீதம்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:34 am
woman-sits-on-snakes-after-died

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். இவருக்கு திருமணமாகி கீதா (30) என்ற மனைவி உள்ளார். ஜெய்சிங் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.  இதனால் கீதா மற்றும் ஜெய்சிங் செல்போனில் மணிக்கணக்காக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதேபோல், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம், கீதா அவரது கணவருடன் செல்போனில் பேசியபடியே  படுக்கையறைக்கு சென்றுள்ளார். 

மெத்தையில் பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் கீதா பாம்புகளின் மீது அமர்ந்துள்ளார். அப்போது பாம்புகள் கீதாவை கொத்தியுள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், மெத்தையில் பார்த்த போது பாம்புகள் இருந்தது. இதை கண்டு அலறிய கீதா, அடுத்த நிமிடமே மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

கீதாவின் சத்தம் கேட்டு உறவினர்கள் படுக்கை அறைக்குள் வந்து பார்த்த போது, இரண்டு பாம்புகள் மெத்தையில் இருந்துள்ளது. கீதா கீழே மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்தவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த உறவினர்கள் ஆத்திரத்தில் அந்த பாம்புகளை அடித்தே கொன்று விட்டனர். 

பாம்புகள் இனச்சேர்க்கையில் இருந்த போது அந்த பெண்,செல்போனில் பேசிய படியே பாம்புகளை கவனிக்காமல் அவற்றின் மீது அமர்ந்ததால் பெண்ணை கடித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இச்சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close