1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடும் குளிரில் சிக்கித் தவிப்பு! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

  முத்து   | Last Modified : 21 Dec, 2019 09:35 am
lorry-driver-were-trapped-snowfall

தமிழகத்தில் நாமக்கல் உள்பட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சரக்கு லாரிகள் ஆப்பிள் பழம் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ளன. தற்போது அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால்  வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதில் கடும் சிரமம்  ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆப்பிள் லோடு ஏற்றிக் கொண்டு புறப்பட்ட 500க்கும் மேற்பட்ட லாரிகள் கடந்த 15 நாட்களாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் நகரை விட்டு வெளியேற முடியாததால் ஓட்டுநர்கள கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தவித்து கொண்டிருப்பதாகவும் லாரி ஓட்டுநர்கள் கவல் தெரிவித்துள்ளார். இந்த வகையில் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி  இருக்கிறார்கள். அவர்கள் சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் அவதி அடைவதாகவும் பெரும்பாலானருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்கள் மீட்க வேண்டும் என லாரி ஓட்டுநர்களும், அவர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். 
  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close