வன்முறையாளர்களை அரசு பழிவாங்கும்! முதல்வர் எச்சரிக்கை 

  முத்து   | Last Modified : 21 Dec, 2019 09:35 am
lucknow-violence-clash-cab

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டோரை மாநில அரசு பழிவாங்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடும் போராட்டம் நிலவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி, சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில் காங்கிரஸ், சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள், நாட்டில் வன்முறை தீயை பரப்புவதாக குற்றம்சாட்டினார். 

உத்தரப் பிரதேசத்தில் வன்முறையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, சிசிடிவி பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு,  வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை அரசு பழிவாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறையாளர்களின் சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டு, பொது சொத்துகளுக்கு ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடாக எடுத்து கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close