வரலாறாக மாறும் மாணவியின் போராட்டம்! வைரல் போட்டோ இது தான்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:39 am
one-girl-was-the-attract-in-the-struggle

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. அதில் மாணவி ஒருவரின் பதாகை அனைவரையும் ஈர்த்துள்ளது. 

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர்15-ம் தேதி டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், சில மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லி போலீசாரின் இந்தச் செயலைக் கண்டித்து மாணவர்கள் ஒன்றிணைந்து டெல்லியில் திரண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதில் இளம்பெண் ஒருவர் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்கும் போட்டோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அந்த மாணவி கையில் வைத்திருக்கும் பதாகையும் போராட்டத்தில் கவனம் பெற்றது. அந்த பதாகையில் ``நான் வரலாறு படிக்கிறேன் என என்னுடைய தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு தெரியாது நான் இங்கு வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறேன் என்று”  என எழுதப்பட்டிருக்கிறது. தற்போது, இந்த பதாகையுடன் கூடிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close