பாஜக MLAவுக்கு இதனால தான் தூக்கு தண்டனை தரலையாம்!? சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:41 am
could-this-be-the-reason-why-bjp-mla-kuldeep-singh-could-not-be-sentenced-to-death

போக்ஸோ சட்டத்திருத்தத்தின் படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  குற்றம் சுமத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நிச்சயம் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஆனால் போக்சோ சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் பாஜக எம்.எல்.ஏவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக அவருக்கு ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது. போக்சோ சட்டத்திருத்ததின் கீழ் பாஜக எம்.எல்.ஏவுக்கு தீர்ப்பு வழங்காததற்கு சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உன்னாவ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாஜகவின் எம்.எல்.ஏவான குல்தீப் சிங்கின் பதவி பறிக்கப்பட்டது. அதோடு பாஜக கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். குல்தீப் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள் அவருக்கான தண்டனை விபரங்களை வெளியிட மறுதேதிக் குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அதன்படி உன்னாவ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குர்தீப் சிங்கிற்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், மக்கள் பணியில் ஈடுபடுபவர் என்பதாலும் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு வாதிட்டார். 

குல்தீப் சிங்கிற்கு அதிகபட்சமாக ஆயுள் சிறையும், ரூ.25 லட்சத்தை இழப்பீடாகத் தரவேண்டும் என முன்வைத்தனர். சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள்  சார்பாக வாதிடப்பட்டது.   இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள் குற்றம் சுமத்தப்பட்ட குல்தீப் சிங் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் சாகும் வரை ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ரூ.25 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும் என்று வாதிட்டார், அதோ போல் ரூ.10 லட்சத்தை உன்னாவ் பெண்ணின் தாயாருக்கு வழங்க வேண்டும் என்றும், உன்னாவ் சிறுமியின் தாயாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 3 மாதத்திற்கு ஒருமுறை சிபிஐ தனது ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும். 

மேலும் தற்போது சிபிஐ பாதுகாப்பில் இருக்கும் உன்னாவ் சிறுமியின் தாயார் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாத வாடகையான ரூ.15,000த்தை,   ஒரு வருடத்திற்கு உத்திரபிரதேச அரசு ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு 2017க்கு முன் நடைபெற்றதால் புதிதாக திருத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரை மட்டுமில்லாமல், தன் உறவினர்களின் உயிரையும் சேர்த்து இழந்த உன்னாவ் சிறுமிக்கு காலம் கடந்து வழங்கப்பட்ட தீர்ப்பும் திருப்திகரமாக இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close