டெல்லியில் நிலநடுக்கம்! 6.8 ரிக்டரால் மக்கள் பீதி!

  Ramesh   | Last Modified : 21 Dec, 2019 09:42 am
earthquake-in-delhi-people-panic

டெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா, உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெல்லியில் மட்டுமல்லாது சண்டிகர், மதுரா ஆகிய இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர், ஹிந்துகுஷ் பகுதியில் மட்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் குடியுரிமை போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்த நில அதிர்வால் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக அலர்ட் மெசேஜ்கள் பரவி வருகின்றன.  நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close